
கவனிக்கப்படாமல் போகையில்.....
பறிக்கப்பட்டும் சந்தையில்
விலைபோகாமல் இருக்கையில்.....
மாலையாக கோர்க்கையில்
சிதறிவிழுந்து சிதைகையில்.....
எம் வாசம் நுகரமுடியாத
இறந்த மனிதர்களுக்கு
அலங்காரமாய் சூடுகையில்....
அர்ச்சனை பூக்களாக
திருச் சன்னதிவரை சென்றும்
தெய்வத் திருவடி அடையாமல்
திரும்பி வருகையில்.......
சொல்லா துக்கங்கள்
விரிந்த எம்முகத்தில்
புன்னகை மட்டும் பார்ப்பவர்கள்
உணர மறந்து விடுகிறார்கள்....
நீரற்ற கண்ணீரையும்
ஓசையற்ற அழுகையையும்..!
No comments:
Post a Comment