சந்தோஷமாகவே உயிர் பறிக்கும் நோய் தான் "காதல்"
ஜெயித்த காதலுக்கு கவிதை "முத்தத்திலும்"
தோழ்வியுற்ற காதலுக்கு "ரத்தத்திலும்" எழுதப்படுகிறது...!
கடல் அலைக்கு கூட காதல் மீது காதல் போல அதனால் தான்
காதலை அழிக்க மனமில்லாமல் திரும்பிச் செல்கின்றன..!
புலிகளை மான்கள் வேட்டையாடுவது காதலில் மட்டும் தான்...!
"தூக்கங்களை" எடுத்து விட்டு
"துக்கங்களை" கொடுத்து சென்று விட்டால் காதல் பரிசாக என் காதலி
மற்றவரின் மனைவியாக...!
ஒருவரை காதலித்தால் உண்மையாக காதலித்து விடு..!
காதலியோ,காதலனோ பிரிந்து சென்றால் அதுவே அவர்களுக்கு ஒரு பெரிய தண்டனை ஆகும்.!
எனக்கு பெற்றோர் வைத்ததோ ஒரு பெயர்,
நண்பர்கள் வைத்த பெயரோ ஒன்று,
எனக்கு நானை வைத்துக் கொண்ட பெயரோ ஒன்று
இவை அனைத்தும் அழகில்லை அவள் அலைக்கும் "பொறுக்கி" போல...!
காதலியே...!
நான் ஒவ்வொரு நாளும் கண்ணீர் வடிக்கிறேன்.....!
அப்படியாவது உன் மேல் நான் வைத்த காதல் கரையட்டும் என்று....!
அவளுக்கு மருதானி வைத்து என் கைகளும் சிவந்ததை இன்றும் என்னி பார்க்கையில்
"என் கண்கள்" சிவக்கின்றன...!
அவள் பிரிவாள்..
என் இதயத்தை அவள் கண்களால் களவு செய்து விட்டு கவிதை செல்கிறாள்..!
காதல் என்று சொன்னால் மட்டும் மறுக்கிறாள்
உன் காதலை கொடு
இல்லை என்றால் என் இதயத்தையாவது திருப்பபிக் கொடு..!
மறுபிறவி உன்டெனில் மானிடப்பிறவி ஏன்?
உன் மார்போடு புதைந்திருக்கும் புத்தகங்களாய் போதுமடி..!
அன்னையிடம் இருக்கும் கைக்குழந்தை போல் தான் காதல்
புடித்தவர்களிடம் புண்ணகை சிந்தும் புடிக்காதவர்களிடம் முகம் சுளிக்கும்.
தவறிய அழைப்புகள்(missed call)
ஒவ்வொன்றையும் தவறாமல் அழைக்கிறேன் ஒருவேளை அழைத்தது அவளாக இருக்க கூடுமோ என்ற சந்தேகத்தில்...!
காதல் குழந்தையை மட்டும் தான் ஆண்,பெண் இருவரும் சுமக்கின்றனர்..!
ஒற்றை நிலவைச் சுற்றி ஓராயிரம் வின்மீண்கள் இருப்பது போல்..,
அவள் ஒருத்தியை சுற்றியே என் ஓராயிரம் என்னங்களும் செல்கின்றன..!
நீ பிறந்த உடன் உன் தாய் "சீம்பால்" தருகிறாள்...!
அவள் மரணத்திற்கு பிறகு "வெறும் பாலாவது"
ஊற்றுவாய் என்பதற்காகத்தான்..!
பேசிய இரவுகளை விட
உன்னுடன்
பேசாத இரவுகளை தான்
அதிகம் விருபுகிறேன்
ஏன் தெரியுமா ?
பேசும் போது
காதல் கோவிலாகிறது
காமம் தீபமாகிறது
பேசாத போது
காதல் காமமாகிறது
காமம் கவிதையாகிறது
நான் கண்ட உன்மை:-
காதல் வரவானால்
கண்ணீர் செலவாகும்..!
முடியும் வரை முயற்சி செய் உன்னால் முடியும் வரை அல்ல..!
நீ நினைத்த காரியம் முடியும் வரை...!
அடிப்பெண்ணே!
உன்னோடு வாழ்ந்த காலம் நான் மண்ணோடு மறையும் வரை மறக்காதடி...!
காதலில் ஜெயித்தவன் சொன்னான் காதல் இன்பம் என்று, காதலில் தோல்வியுற்றவன் சொன்னான் காதல் துண்பம் என்று, உண்மையை தெரிந்து கொள்ள நானே காதலித்தேன் பின்புதான் தெரிந்தது காதல் இன்பமான துண்பம் என்று..!
(எவன் தான் சொன்னாத கேக்குறான் அவன் அவன் பட்டாத்தான் திருந்துறான்)
இரவுகள் நம்மைத் தூங்க அழைத்தாலும், பல உறவுகளின் நினைவுகள் நம்மை தூங்க விடுவதில்லை..!
அமுதம் தான்
காதலும்,காதலியும்
நீ அதிகம் அருந்தாதவரை...!
செடிகளில் பூத்துக்குலுங்கியும்
கவனிக்கப்படாமல் போகையில்.....
பறிக்கப்பட்டும் சந்தையில்
விலைபோகாமல் இருக்கையில்.....
மாலையாக கோர்க்கையில்
சிதறிவிழுந்து சிதைகையில்.....
எம் வாசம் நுகரமுடியாத
இறந்த மனிதர்களுக்கு
அலங்காரமாய் சூடுகையில்....
அர்ச்சனை பூக்களாக
திருச் சன்னதிவரை சென்றும்
தெய்வத் திருவடி அடையாமல்
திரும்பி வருகையில்.......
சொல்லா துக்கங்கள்
விரிந்த எம்முகத்தில்
புன்னகை மட்டும் பார்ப்பவர்கள்
உணர மறந்து விடுகிறார்கள்....
நீரற்ற கண்ணீரையும்
ஓசையற்ற அழுகையையும்..!
அவள் வளர்க்க நினைக்கும் "காதல் பறவை"(love birds)யையே ஏற்றுக் கொள்ளாத அவள் பெற்றோர்கள்,
எப்படி ஏற்றுக்கொள்ளப் போகிறார்களோ வளர்ந்து கொண்டிருக்கும் எங்கள் "காதல் உறவை"...!!!?
ஆண்கள் காசு கொடுத்து பெண்களின் கற்பை அழித்த காலம் போய்..,
பெண்களே காசு கொடுத்து தன் கற்பை அழித்துக் கொள்கின்றனர் "திருமணம்" என்னும் பெயரில்...!
(இதை சிந்தித்தால் சிரிப்பு வரும்,மனம் நொந்தால் அழுகை வரும்)
ஓரிரு நாட்களில் கிழிந்து விடும் புத்தகத்தை கூட உன் மார்போடு அனைத்துக் கொள்கிறாய்..!
வாழ்நாள் வரை உன்னுடன் வாழ நினைக்கும் என்னை மட்டும் ஏனடி வெறுத்து கொல்கிறாய்..??