செல்லக் கொஞ்சி, மெல்ல தீண்டி, கட்டி அனைத்து, கதறி அழுது,
ஒட்டி உறசி விட்டு பிரிந்த காதலியே நலமாய் உள்ளாயா?
இனி ஒருமுறை என் முன் வந்து விடாதே
உன்னை பார்க்க என் இதயத்தில் நலமும் இல்லை, நல்லதொரு பலமும் இல்லை..!
ஆயிரம் மலர்களில் சேகரித்த தேனை அரை நொடியில் இழந்து விட்ட தேனீ போல தவற விட்டு தவிக்கிறேன் என் காதலை...!
ஒவ்வொருவரையும் நம்புகிறோம்
நமக்கு நம்மேல் இருக்கும் தன்னம்பிக்கையை மறந்து...!
சுகப்பிரியன்+கருமாந்தரக்காதலன்
நானும் நாணயம் உள்ளவன் தான்,
நாணயம் தொலைந்ததால் நான் என் நாணம் தொலைத்து விட்டேன்..!
#
புரியலேனா பேசாம இருந்துக்கோங்க,
விளக்கம் லா கேக்க கூடாது.
மும்மாரி மழைபெய்து
முப்போகம் பயிரிட்டு
கருக்கு அறிவாள் கதிர் அறுத்து
களத்துமேடில் அதை சேர்த்து
யானை கட்டி,
சேனை கட்டி
நெல்லாக்கி
பகலவனை வழிபட்டு
பச்சரிசி பொங்கலிட்டு
பாமரனுக்கு படி அளந்து
மீதம் மாட்டு
வண்டி பூட்டி வந்து
சந்தையில
சாக்கு புடித்த காலம்
சாக்கு போக்கு சொல்லி போனதடி..!
ஏழை விவசாயி மகன் மைதிலிபாண்டி
ஒவ்வொரு முறையும் அவளிடம் தோற்று விடுகிறேன்,
உன்னை மறந்துவிடுவேன் என்று பந்தயம் கட்டி...!
தன் இனத்தை தானே அழிக்க நினைக்கும் ஆறறிவு மிருகம்
#
மனிதன்
தினமும் தூவி விட்டு செல்கிறேன் அவளுக்காக
க(விதை) என்றாவது முளைவிடும் என்ற நம்பிக்கையில்..!
அமைதியான இரவென்கிறார்கள்,
என் அமைதியை குலைத்து செல்வதே இந்த இரவு வேளைதான்,
அவசர பகலில் அதிகம் வராத அவளின் நினைவுகள் இடைவிடாது துரத்துகிறது இந்த இரவு வேளைகளில்...!
அழகாய் பேசி சிரிப்பவள் தான்..!
இன்று ஏனோ ஊமை நாடகம் போடுகிறாள். உண்மை என்றும் உன்னைப் போல் ஊமையாகதடி.!
பேசாமல் பிரிந்து சென்ற காதலி 6 மாதங்களுக்கு பிறகு அனுப்பிய குறுஞ்செய்தியை பார்த்தே பெருமகிழ்ச்சி அடைகிறது என் இதயம்..!
நான் காதலியிடம் தோற்றவன்,
ஆனால்
காதலிடம் தோற்றவன் அல்ல..!
ஜென்மபுத்தி செருப்பால் அடித்தாலும் போகாது
#
அதனால் தான் செருப்பை காட்டியும் அவள் பின்னால் செல்கிறது என் காதல்.
பெரிய பெரிய படை(டி)ப்பாளிகள் அதிகம் விரும்புவதில்லை.!
என்னைப்போல்
அரைகுறை படை(டி)ப்பாளிகள் தான் அதிகம் விரும்புகிறோம்
#
தமிழ்மொழியை..!
அடுத்தவருக்கு துன்பம் இழைப்பவன் இருப்பதை விட இறப்பதே மேல்...!
மும்மொழி அறிந்தவள் என்னிடம் மட்டும் மெளனமொழி தான் பேசுகிறாள். அவளின் நான்காவது மொழியாக..!
இளவயதின் தாடி, முதுமையில் தடி வந்த போதும் மறவாது...!
அவளுக்கு என்னை பிடிக்கவில்லை என்று தெரிந்தபின்புதான் எனக்கு அதிகம் பிடித்து விட்டது...!
#
அவளின் தங்கையை..!
சிகரெட்டை "மனமகிழ்சி" என்று உறிஞ்சும் மானிடா..!
அதுதான் உனக்கு "மரணக்குச்சி" என்பதையும் மறந்து விடாதே...!
#
சிகரெட்டை குறைச்சு ஆயுளை கூட்டிங்கங்க.
அன்று என் இரவுகளை கூட இனிமையாக்கிய அவளின் நினைவுகள்,
இன்று ஏனோ என்னையே தனிமையில் விட்டுச் சென்றது...?
இந்தகட்டை (நான்) வேகுற வரைக்கும்,
அந்த செமக்கட்டைய(்காதலிய) மறக்கவே முடியாது...!
மதுரையில் பல மீனாட்சிக்கு திருமணமாகமலிருக்க,
முதிர்கன்னி மதுரை ஸ்ரீமீனாட்சிக்கு வருடா வருடம் திருமணம் ஏன்.?
நானும் சுயநலக்காரன் தான் என்னவள் ஒருத்திக்கு மட்டுமே என் இதயத்தில் இடம் தருவதால்..!
நானும் சுயநலக்காரன் தான் என்னவள் ஒருத்திக்கு மட்டுமே என் இதயத்தில் இடம் தருவதால்..!
என் சிந்தனையில் மட்டும் வந்தனைப்பவளே.! வந்துவிடடி என் முன் என் இலையுதிர் காலம் வசந்தகாலமாக..!
இன்னொரு முறையும் அவளையே காதலித்து நான் தோற்கவேண்டும்..!
என் காதல் காதலாகவே இருக்க.
காற்று சொல்லும் காதலுக்கு,சரி என தலை அசைக்கும் ரோஜா வை வைத்துக்கொண்டு, என்காதலை உதறிச் செல்லும் பெண்ணே..! தயவு செய்து நீ சூடிக்கொள்ளாதே இந்த ராசவின் காதலை மறந்து
ரோஜாவை...!
உண்மைக்காதலே இங்க இல்ல சித்தப்பு இங்கே ஒருத்தி சாகுறா ஆனா ஒருத்தன் வாழுறான்,என்னடா உலகம் இதில் எத்தன கலகம் இதில் காதலே பாவம் இது யார்விட்ட சாபம்.
கல்யாணக் கோலத்தில் கண்ணீரோடு கலங்கிநின்ற என் காதலியை பார்த்தேன் மலர்ந்து சிரிக்கும் 100 ரோஜாக்களுக்குள் கருகும் ஒற்றை ரோஜாவாக..!
காதலியை பற்றி கதை கதையாக எழுதலாம் என எழுது கோலை எடுத்தேன்....!
காதல் என்றால் என்ன?
என்ற இந்த ஒருவார்த்தைக்கே விடை தெரியாமல் விழித்துக் கோண்டிருக்கிறேன்
வெகுகாலமாக..!
கருவறையும், கல்லறையும் எனக்கு ஒன்றுதான்..!
#
நத்தை
"வாழ்வது ஒருமுறை வாழ்த்தட்டும் தலைமுறை"
இனிய புத்தாண்டு வாழ்த்துக்களுடன் மைதிலிபாண்டி