Friday, December 28, 2012

பிச்சை

வார்த்தையை கொட்டி தட்டில் பொருளை கேட்கிறான் "ஏழை"
#
அம்மா தாயே தர்மம் பன்னுங்க


உண்டியலில் பொருளைக் கொட்டி வார்த்தை கேட்கிறான் "பணக்காரன்"
#
ஆத்தா ஈஸ்வரி எனக்கு குழந்தை பிச்சை போடு
¥
புலம்பலுடன் பொறுக்கி

ஏழையின் சிரிப்பு

இந்த ஜென்மத்தில் நான் இறைவனை காண்பேன் என்று எனக்கு நம்பிக்கை இல்லை..!
#
ஏழையின் சிரிப்பினில் இறைவனைக் காணலாம்.
¥ புலம்பலுடன் பொறுக்கி

Saturday, December 15, 2012

பிணப்பெண்

பல மணப்பெண்கள்,பிணப்பெண்ணாய்த்தான் அமர்கின்றார்கள் மணவறையில், தன் பழைய காதலை மறக்கமுடியாமல்...!
#
புலம்பலுடன் பொறுக்கி

Friday, December 14, 2012

பசி ருசி அறியாது

பணக்காரனுக்கு "டேஸ்ட் பிரியாணி"

பிச்சைக்காரனுக்கு "வேஸ்ட் பிரியாணி"

#
"எஞ்சி"இருக்கும் காலத்தை "கஞ்சி" குடித்தாவது கழித்தாக வேண்டும்

Wednesday, December 12, 2012

ரஜினி பிறந்தநாள்

16வயதினிலேயே "அபூர்வராகங்கள்" மீட்டி "ஆறிலிருந்து அறுபது" வயது உள்ளவர்களுக்கு கூட "நெற்றிக்கண்" ஐ திறந்து சினிமாவுலகிற்கு "தளபதி" ஆகவும் "நல்லவனுக்கு நல்லவன்" ஆகவும் ஏழைகளுக்கு "எஜமான்" ஆகவும் ஒளி தருவதில் "அண்ணாமலை" தீபமாகவும் பல "தில்லுமுல்லு" செய்து "முரட்டுக்காளை" யையும் அடக்கி "முள்ளும் மலரும்" சேர்த்து பரித்து

"படிக்காதவன்" ஆயினாலும் "பணக்காரன்"

ரசிகர்கள் "மனிதன்" வடிவில் கண்ட "ஆண்டவன்"

ரஜினி நலமாக வாழ "பாபா" ஆசிர்வதிப்பாராக..!

#
எவனாச்சும் இத காப்பி அடிச்சு போட்டீங்க..! அப்பறம் அவ்வளவுதான் பொறுக்கி அழுதுடுவான்..!

Monday, December 10, 2012

முதல் கடவுள்

தன் இரத்தத்தை பங்கு வைத்து, எனக்கு பிறப்பு தந்த என் அன்னையே எனக்கு "முதல் கடவுள்"

Wednesday, December 5, 2012

குறுஞ்செய்தி

விட்டுச் சென்ற காதலியே...!

உன் நினைவுகள் என்னை இன்னும் தொட்டுச் செல்கிறதடி,

பேச நேரமில்லையோ..!
நேரமில்லையானால் யானால்

ஒரு குறுஞ்செய்தியாவது அனுப்பு நான் பெருமகிழ்ச்சி அடைய...!

Tuesday, December 4, 2012

முதல் பக்கம்

என் புத்தகத்தின் முதல் பக்கத்தில் மட்டும் என் பெயரும்,
மற்ற பக்கங்களில் உன் பெயரை மட்டுமே சித்தரிக்கும் சிறு குழந்தையடி நான்...!

கண்மூடித்தனத் காதல்

கண்கள் மறைக்கப்பட்டு செல்லும் வண்டிக் குதிரை போல்,நீ செ(ா)ல்லும் வழியெல்லாம் வருகிறேனடி பெண்ணே...!
காதல் குதிரையாக நான்...

காதல் தாய்

அடித்தாலும் தன் தாயைத்தேடும் சிறுபிள்ளை போலவே..!

பிரிந்த உன்னையே தேடுதடி என் மனம்...!

காதல் அடிமை

நான் அடிமையாக வாழ்ந்தாலும் சந்தோஷப்படுவேன்..!
என்மேல் அன்பான உன் முன் மட்டும்...!

பிரிவின் வலி

என் கண்ணீரும் முகம் கழுவிச் சொல்கிறதடி...!
என்னை விட்டு பிரிந்த உன்னை நினைக்கும் போது...!

Saturday, December 1, 2012

எய்ட்ஸ்

எனக்கும் எய்ட்ஸ்க்கும் எந்த சீமந்தமும் இல்ல...!

எனக்கு மட்டும் எம்புட்டு எய்ட்ஸ் தின வாழ்த்துக்கள்..!