நானும் நாணயம் உள்ளவன் தான்,
நாணயம் தொலைந்ததால் நான் என் நாணம் தொலைத்து விட்டேன்..!
#
புரியலேனா பேசாம இருந்துக்கோங்க,
விளக்கம் லா கேக்க கூடாது.
மும்மாரி மழைபெய்து
முப்போகம் பயிரிட்டு
கருக்கு அறிவாள் கதிர் அறுத்து
களத்துமேடில் அதை சேர்த்து
யானை கட்டி,
சேனை கட்டி
நெல்லாக்கி
பகலவனை வழிபட்டு
பச்சரிசி பொங்கலிட்டு
பாமரனுக்கு படி அளந்து
மீதம் மாட்டு
வண்டி பூட்டி வந்து
சந்தையில
சாக்கு புடித்த காலம்
சாக்கு போக்கு சொல்லி போனதடி..!
ஏழை விவசாயி மகன் மைதிலிபாண்டி
ஒவ்வொரு முறையும் அவளிடம் தோற்று விடுகிறேன்,
உன்னை மறந்துவிடுவேன் என்று பந்தயம் கட்டி...!
தன் இனத்தை தானே அழிக்க நினைக்கும் ஆறறிவு மிருகம்
#
மனிதன்
தினமும் தூவி விட்டு செல்கிறேன் அவளுக்காக
க(விதை) என்றாவது முளைவிடும் என்ற நம்பிக்கையில்..!
அமைதியான இரவென்கிறார்கள்,
என் அமைதியை குலைத்து செல்வதே இந்த இரவு வேளைதான்,
அவசர பகலில் அதிகம் வராத அவளின் நினைவுகள் இடைவிடாது துரத்துகிறது இந்த இரவு வேளைகளில்...!
அழகாய் பேசி சிரிப்பவள் தான்..!
இன்று ஏனோ ஊமை நாடகம் போடுகிறாள். உண்மை என்றும் உன்னைப் போல் ஊமையாகதடி.!
பேசாமல் பிரிந்து சென்ற காதலி 6 மாதங்களுக்கு பிறகு அனுப்பிய குறுஞ்செய்தியை பார்த்தே பெருமகிழ்ச்சி அடைகிறது என் இதயம்..!
நான் காதலியிடம் தோற்றவன்,
ஆனால்
காதலிடம் தோற்றவன் அல்ல..!
ஜென்மபுத்தி செருப்பால் அடித்தாலும் போகாது
#
அதனால் தான் செருப்பை காட்டியும் அவள் பின்னால் செல்கிறது என் காதல்.
பெரிய பெரிய படை(டி)ப்பாளிகள் அதிகம் விரும்புவதில்லை.!
என்னைப்போல்
அரைகுறை படை(டி)ப்பாளிகள் தான் அதிகம் விரும்புகிறோம்
#
தமிழ்மொழியை..!
அடுத்தவருக்கு துன்பம் இழைப்பவன் இருப்பதை விட இறப்பதே மேல்...!
மும்மொழி அறிந்தவள் என்னிடம் மட்டும் மெளனமொழி தான் பேசுகிறாள். அவளின் நான்காவது மொழியாக..!
இளவயதின் தாடி, முதுமையில் தடி வந்த போதும் மறவாது...!
அவளுக்கு என்னை பிடிக்கவில்லை என்று தெரிந்தபின்புதான் எனக்கு அதிகம் பிடித்து விட்டது...!
#
அவளின் தங்கையை..!