இருண்ட வானிலை எங்கோ ஒரு ஓசை, ஏதோ ஒரு வெளிச்சம் ,ஏனோ ஒரு சத்தம்..! நிலையில் முட்டி மோதி எட்டி பார்த்த போது உடல் தட்டி சென்றது குளிரென நீர் சிலநொடிகளில் சில்லென்ற சிலிர்த்த உடலோடு பட்டென பறந்து பாடப்புத்தக்கம் கிழித்து சிங்கார படகு செய்து சிறு குச்சிகள் அதிலடிக்கி சிரிப்போடு நீரிறக்கி விளையாண்ட காலத்த..! எம்புள்ள செய்யயுல என்னறியாம சிந்துதடி என் கண்ணுல முத்துமழை...!